June 7, 2017 தண்டோரா குழு
உத்தரபிரதேஷத்தில் மனித தலைபோல் உருவம்கொண்ட கன்றுக்குட்டிக்கு ஒன்று பிறந்துள்ளது.
உத்தரபிரதேஷ மாநிலத்தின் முசபர்நகரிலுள்ள பச்சேந்தா கிராமத்தில் முழுவளர்ச்சி அடையாத கன்றுக்குட்டி ஒன்று பிறந்தது. அந்த கன்றுக்குட்டி மனித முகம் போன்ற தோற்றம் கொண்டது. இதைக்கண்ட அந்த கிராமத்து மக்கள், அந்த கன்றுக்குட்டி விஷ்ணு கடவுளின் வெளிப்பாடு என்று தெரிவித்தனர்.
ஆனால், பிறந்த சில நேரங்களில் அந்த கன்றுக்குட்டி இறந்துவிட்டது. அதன் கழுத்தில் பூமாலைகள் போட்டு, ஒரு கண்ணாடிப்பெட்டியில் வைத்துள்ளனர். பச்சேந்தா கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் வந்து அதற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறந்த கன்றுக்குட்டியை புதைக்கும் இடத்தில், அதற்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வனவிலங்கு அதிகாரி அஜய் தேஷ்முக் கூறுகையில்,
“இந்த கன்றுக்குட்டி ஒரு அதிசயம் இல்லை. தாயின் கருவிலிருக்கும்போது, சில உறுப்புக்கள் சரியாக வளர தவறும்போது, இது போன்ற விசித்திர உருவங்கள் ஏற்படுகிறது. மூடநம்பிக்கையுடன் இந்த கன்றுக்குட்டியின் குறைப்பாட்டை மக்கள் இணைக்கிறார்கள்” என்று கூறினார்.