• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்வித் தகுதி பிரச்சனை முடித்து வைத்த பல்கலைக்கழகம்.

May 10, 2016 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு தான் உள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமரின் கல்வி தகுதி குறித்து மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதையடுத்து இது குறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டெல்லி பல்கலைக் கழகத்துக்கும், குஜராத் பல்கலைக் கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து குஜராத் பல்கலைக் கழகம் மோடியின் முதுகலை கல்வி தகுதியை வெளியிட்டது. எனினும் குஜராத் பல்கலைக்கழகம் அவரது இளங்கலை கல்வி குறித்த எந்த ஆவணமும் தங்களிடம் இல்லை என மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி தில்லிப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ, படிக்கவில்லை என்றும், பி.ஏ, படிக்காமல், எப்படி குஜராத் பல்கலைக் கழகத்தில் அவர் எம்.ஏ, பட்டம் பெற்றார் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கடந்த திங்கள் அன்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து பி.ஏ. பட்டம் பெற்ற சான்றிதழையும், குஜராத் பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.ஏ. பட்டம் பெற்ற சான்றிதழையும் காட்டினார்.

மேலும் மோடி மீது இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை வைக்கும் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அமித்ஷா காட்டிய சான்றிதழ்கள் போலியானவை என ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அசுதோஸ் என்பவர் கூறினார்.

மேலும் இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் கூறும்போது, “அமித் ஷா ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் சில டிகிரி சான்றிதழ்களே காட்டி அவை தான் உண்மையானவை என்று கூற முடியாது,’’ என்றார். மேலும், மோடியின் பி.ஏ. மதிப்பெண் சான்றிதழில் அவர் படித்த ஆண்டு 1977 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆனால் பட்டம் பெற்ற சான்றிதழில் 1978 என்று காட்டப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அதைபோல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பொறுத்தவரை 1979ஆம் ஆண்டுதான் அவர் அனைத்துத் தாள்களையும் எழுதி தேர்ச்சி அடைந்ததாகக் காட்டுகிறது.

இது உண்மை எனில் எப்படி அவர் 1978ஆம் ஆண்டு பட்டச் சான்றிதழைப் பெற்றிருக்க முடியும்? மேலும் மதிப்பெண் சான்றிதழில் நரேந்திர குமார் தாமோதர் தாஸ் மோடி என்றும், டிகிரி சான்றிதழில் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என்றும் இருக்கிறது. டிகிரி சான்றிதழ் போலியான ஒன்று என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் கூறினார்.

அதேபோல, எம்.ஏ. சான்றிதழை ஆய்வு செய்து பார்க்கும் போது அதில் பெயர்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றபடி ரோல் நம்பரைக் காணவில்லை. ரோல் நம்பரே இல்லாமல் சான்றிதழ் பெற்ற ஒரே நபர் மோடியாகத்தான் இருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் டெல்லி பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்ட அறிக்கையில் நேற்று அமைச்சர்கள் வெளியிட்ட சான்று உண்மையானது தான் என தெரிவித்துள்ளார். இதனால் பிரதமரின் கல்வித் தகுதி குறித்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இதன் பிறகும் கல்வி தகுதி குறித்த பிரச்சனை எழுந்தால் அது ஆம்ஆத்மி கட்சிக்குதான் பின்னடைவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் படிக்க