June 9, 2017 tamil.boldsky.com
தேவையான பொருட்கள்:
மசித்த வாழைப்பழம் – 1/2 கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன்
மைதா – 2 கப்
எள் – 1 டீஸ்பூன்
ஓமம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, அத்துடன் எண்ணெயை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக பூரி மாவு போன்று பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். எண்ணெய் சூடாவதற்குள், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக்கி, அதனை தேய்த்து, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மங்களூர் பன் அல்லது வாழைப்பழ பூரி ரெடி!!! இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.