June 9, 2017 தண்டோரா குழு
விண்வெளியில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு இந்திய மாணவியின் பெயர் சூட்டப்படும் என்று அமெரிக்காவின் லிங்கன் ஆய்வகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்திலுள்ள மசெசூட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்தும் International Science and Engineering Fair என்னும் அறிவியல் போட்டி மே 14 முதல் 19ம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் பெங்களூர் மாணவி சாஹிதி பிங்கலி கலந்துக்கொண்டு வெற்றி பெற்பெற்றார்.இதையடுத்து சாஹிதியைக் கௌரவிக்கும் வகையில் விண்வெளியில் உள்ள சிறிய கிரகத்திற்கு அவருடைய பெயர் சூடப்படும் என்றும் லிங்கன் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
சாஹித்தி பெங்களூரிலுள்ள Inventure Academy என்னும் சர்வதேச பள்ளியில் 12 வகுப்பு படித்து வருகிறார். அவர் எழுதிய “An Innovative Crowdsourcing Approach to Monitoring Fresh Bodies” என்னும் சிறப்பு கட்டுரைக்கு மூன்று சிறப்பு விருதுகள் கிடைத்தது.
நீர்நிலைகளின் சுத்தத்தை கண்காணிக்க மொபைல் அப்ளிகேஷன் குறித்த சாஹிதியின் ஆய்வறிக்கைக்கு இந்த விருது கிடைத்துள்ளது.மேலும் இந்த முறையை Crowdsourcing எனப்படும்(இணையதளத்தின் பயனர்களிடமிருந்து தேவையான சேவைகள் அல்லது கருத்துகளை பெற பயன்படுத்தப்படும் முறை)மூலம் தயாரித்துள்ளார்.
இந்த அறிவியல் கண்காட்சியில் மூன்று சிறப்பு விருதுகளை வென்ற சாஹிதி, ஒட்டுமொத்தமாக 2ஆவது பிடித்ததாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சாஹிதி கூறுகையில்,
“இவ்வளவு பெரிய வெற்றி எனக்கு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. எனக்கு ஒரு சிறப்பு விருது கிடைக்கும் என்று எண்ணினேன் ஆனால் மூன்று விருது கிடைத்தது பெருமையாக இருக்கிறது. விண்வெளியில் உள்ள கிரகத்திற்கு என்னுடைய பெயர் வைக்கப்படும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று சாஹித்தி பிங்காலி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.