• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிநீருக்கு சுத்திகரிக்கப்பட்ட கல்குவாரி நீர் விநியோகம் – சென்னை குடிநீர் வாரியம்

June 10, 2017 தண்டோரா குழு

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க காஞ்சிபுரம் மாவட்ட கல்குவாரிகளில் உள்ள நீரை சுத்திகரித்து இன்று முதல் விநியோகிக்க உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டாலும் கோடை காலத்தில் நிலவி வந்த வறட்சி காரணமாக சென்னையில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையின் குடிநீர் ஆதராமாக கருத்தப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் தற்போது நீர் வரத்து குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் நிலவும் இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கல்குவாரிகளில் தேங்கியுள்ள நீரை சுத்திகரித்து இன்று முதல் விநியோகிக்க உள்ளதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 2௦க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை பயன்படுத்த சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் கல்குவாரியில் உள்ள நீர், குடிக்க தகுதியுடையது என தெரியவந்தது. இதையடுத்து நீரை சுத்திகரித்து விநியோகிக்க முடிவு செய்யப்பட்டது. குவாரிகளில் உள்ள நீர் செம்பரம்பாக்கம் ஏரி அருகே உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டம் ரூ.13 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சுமார் 100 நாட்களுக்கு நாள்தோறும் நான்கு கோடி லிட்டர் தண்ணீரை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக சென்னைக்கு குடிநீர் வழங்கவிருக்கும் கல்குவாரிகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து அனைத்து குவாரிகளையும் பார்வையிட உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க