• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு செப்புக் காசின் விலை 72000 பவுண்டு.

May 11, 2016 தண்டோரா குழு

லண்டனில் ஒரு செப்புக் காசு சரித்திரத்திலேயே முதன் முறையாக 72,000 பவுண்டுக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இந்த ஏலத் தொகை போன ஏலத்தொகையை விட 60 விழுக்காடுகள் அதிகம் என்று ஏலக் கம்பனி கூறியுள்ளது.

இவை செப்பினால் செய்யப்பட்டவையாகும்.

இந்தக் காசு (Penny) 1933ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதாகும். இந்தக் காசுகள் பேட்டன் வர்ஷன் என்று கூறப்படும் மாதிரிப் பதிப்புகள் ஆகும். நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு முன்பு வெள்ளோட்டமாக அறிமுகப்படுத்தப்படும். காயின்ஸ் மெடல்ஸ் அண்டு டெகொரேஷன் அமைப்பின் வடிவமைப்பாளரான ஆண்டிரி லாவிரில்லர் என்பவரால் இந்தக்காசுகள் வடிவமைக்கப்பட்டது.

இந்தக் காசின் ஒரு பக்கம் கிங் ஜார்ஜ் 5 ன் தலையும், மறுபக்கம் பிரிட்டானியாவும் அச்சிடப்பட்டிருக்கும். பேட்டன் வர்ஷன் காயின்ஸ் நான்கு மட்டுமே அச்சிடப்பட்டன.

அவற்றில் ஒன்று 2004ம் ஆண்டு 40,000 பவுண்டுக்கும், 2006ம் ஆண்டு 45,000 பவுண்டுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இப்போது அந்த அரிய வகை காசில் ஒன்றே வரலாறு காணாதவகையில் 72,000 பவுண்டுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, 1932 ம் ஆண்டு அச்சிட்ட காயின்களே மிகுந்த அளவில் புழக்கத்தில் இருந்த காரணத்தினாலும் மிகுந்த அளவு உற்பத்தி செய்யும் அளவிற்கு அவை சிறந்தவையாக இருக்கவில்லை என்ற காரணத்தினாலும் 1933ம் ஆண்டு கரன்ஸி காயின்ஸ்கள் 7 மட்டுமே அச்சிடப்பட்டன.

அவற்றில் மூன்று ராஜாவின் மூன்று பிரதான கட்டிடங்களின் அடிக்கல் நாட்டுகையில் புதைக்கப்பட்டன.

சர்ச் ஆஃ செயின்ட் கிராஸ் மிடில்டன் லீட்ஸ் கட்டிடத்தின் அடியில் இருந்து ஒரு காசு 1970ம் ஆண்டு திருடர்களால் திருடப்பட்டது.

மறுபடியும் ஒரு திருட்டிற்கு இடம் கொடுக்க வேண்டாம் என்ற எண்ணத்தில், பிஷப் ஆஃ ரிப்பன், நார்த் லீட்ஸ் செயின்ட் மேரி சர்ச் கட்டிடத்தின் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் காசை எடுத்து விற்பனை செய்துவிடுமாறு ஆணையிட்டார்.

ப்ளு பெரியில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃ லண்டன் செனட்டேர்ஸ் ஹவுஸ் கட்டிடத்தின் கீழ் புதைக்கப்பட்டுள்ள காசு அப்படியே இருக்குமென நம்பப்படுகிறது.

வேறு இரண்டு பிரிட்டிஷ் மியூஸியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மற்ற இரண்டு தனி நபர்களின் வசம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு ஒரு பிரிட்டிஷ் வியாபாரி தன்னுடைய 1933ம் ஆண்டு காயினை விற்பனை செய்ய இன்டர் நெட்டில் அளித்திருந்த விளம்பரம் அனைவரையும் பரபரப்பிற்கு உள்ளாக்கியது. அதில் அவர் அந்தக் காசு தனக்கு எப்படிக் கிடைத்தது என்பதையும் விளக்கியுள்ளார்.

மேற்கு லண்டனில் உள்ள ஐசிலிவர்த் எனும் இடத்தில் வசிக்கும் பெண்மணி தன்னிடம் உள்ள காயின் தனக்குத் தனது தாத்தாவினால் தரப்பட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் இது அந்த காலத்தில் கடிகாரத்தின் பெண்டுலத்தின் எடையைக் கணக்கிடப் பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஏல நிறுவனமான ஏ எச் பால்ட்வின் அன்ட் சன்ஸ் கூறுகையில் இந்த ஏலத்தொகை எதிர்பார்த்ததை விட இரு மடங்கு அதிகம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க