• Download mobile app
26 Apr 2025, SaturdayEdition - 3363
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதி ஒதுக்கீடு -தமிழக முதல்வர்

June 12, 2017 தண்டோரா குழு

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூபாய் 56.92 கோடி நிதி ஒதுக்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜுன் மாதம் தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால், இந்த வருடம் பருவ மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி ரூ.56.92 கோடி நிதி ஒதுக்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், பயறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ.960 வீதம் வழங்கப்படும் எனவும், இந்த ஆண்டும் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

இதுத் தவிர நெல் பயிருக்கு மாற்றாக 1.32 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாற்று பயிர் சாகுபடி நடவடிக்கை, பயிர் மற்றும் நெல் சாகுடி விவசாயிகளுக்கு உரங்கள் 100 சதவீதம் மானியத்தின் கீழ் வழங்கப்படும் எனவும், நெல் நடவு இயந்திரங்களைக் கொண்டு நடவு செய்ய ரூ.4000ம்,ஜிங்க் சல்பேட் மற்றும் உயிர் உரங்களுக்கு ஏக்கருக்கு ரூ.520 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க