தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – சிறிது (நெய்யில் வறுத்தது)
பால் – 2 கப்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அரிசியை நீரில் நன்கு கழுவி, பெரிய குக்கரில் போட்டு, அத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து, 1 கப் பால் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும், குக்கரை திறந்து, மீதமுள்ள பாலை ஊற்றி கரண்டியால் மசித்து விட வேண்டும். பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து, 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, பின் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பிறகு அதில் தேங்காய், வறுத்த முந்திரி சேர்த்து கிளறி இறக்கினால், பச்சரிசி பால் பொங்கல் ரெடி!!! இந்த பொங்கலை பொங்கல் புளிக் குழம்புடன் சாப்பிட்டால், அற்புதமாக இருக்கும்.
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்
தேசிய சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கதை தட்டி சென்ற கோவை மாணவி!
துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் சாதனை
பாஷ் சிஎஸ்ஆர் திட்டத்தின் கீழ் நேட்டிவ் மெடிக்கேர் அறக்கட்டளை மூலமாக மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயனாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன
நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு முக்கிய பங்கு – இந்திய வர்த்தக சபை கோவை கிளை தலைவர் ராஜேஷ் லுந்த்