June 14, 2017 தண்டோரா குழு
டெல்லி குற்றவியல் நீதிமன்றத்தில், குழந்தை வரைந்த ஓவியத்தை வைத்து பாலியல்குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையைநீதிமன்றம் வழங்கியது.
தாய் இறந்து,தந்தையால்அனாதையாக விடப்பட்ட 8 வயது பெண் குழந்தை ஓன்று அத்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். அப்போது அத்தையின் கணவர் அக்தர் அகமது, அந்தக் குழந்தையை யாரும் இல்லாத நேரத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்ச்சிசெய்து வந்துள்ளார்.
இந்த விஷயம் தெரியவந்ததும் அக்தர் அகமது கைது செய்யப்பட்டார். குழந்தை, பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்கான ஆதாரமாக மருத்துவச்சான்றிதழ் இருந்துள்ளது. ஆனால், அக்தர் அகமது கடைசி வரை தன்னை நிரபராதியாகவே காட்டிகொண்டிருந்தார்.
இதனால்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதுதொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது. இதயைடுத்து, நீதிபதி, அந்தக் குழந்தையிடம் நடந்த விஷயங்களை வரையச்சொல்லி கிரையான்ஸும் பேப்பரும் வழங்கியுள்ளார்.
அப்போது அக்குழந்தை ஒரு வீட்டில் குழந்தை நிர்வாண நிலையில் கையில் பலூன்கள் வைத்திருந்த நிலையில் நின்றுகொண்டிந்தது போலவும், அதன் அருகே ஆடைகள் களையப்பட்டு கீழே இருப்பது
போல வரைந்திருந்தது.
இதனைத்தொடர்ந்து குழந்தையின் ஓவியத்தையும், மருத்துவச் சான்றிதழையும் ஆதாரமாக வைத்து நீதிபதி அக்தருக்கு 5 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கினார்.