June 15, 2017
தண்டோரா குழு
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பெங்களூரு சிறையில்இருக்கும் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் அதிமுக துணைப் பொதுசெயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து வருகிறார்.டெல்லி சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசியை தினகரன் சந்திப்பது 2-வது முறை ஆகும்.
அதிமுகவில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்தும் எம்.எல்.ஏக்களின் வீடியோ விவகாரம் குறித்தும் ஆலோசிக்க சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில்,தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் அறையில்முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சந்திப்பில் தினகரனை ஆதரிக்கும் 34 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாலை 5மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.