June 15, 2017
தண்டோரா குழு
காலா படதிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ரஜினிகாந்த், தனுஷ் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனுஷின் வண்டார் பார் நிறுவனம் தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் காலா (எ) கரிகாலன். இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு அண்மையில் மும்பையில் நடந்து முடிந்தது.
இதற்கிடையில், காலா படதிற்கு எதிராக ராஜசேகரன் என்பவர்சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் 1994ல் கரிகாலன் என்ற பெயரில் பதிவு செய்துள்ளதாகவும் படத்தின் தலைப்பு, மூலக்கரு முழுவதும் என்னுடைய உருவாக்கம். அதை மறுபதிப்பு செய்து படம் எடுக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டினர்.
இந்நிலையில், ராஜசேகரன் தொடுத்த வழக்கில் இயக்குனர் ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பதிலளிக்க வரும் 23ம் தேதி வரை அவகாசம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.