June 16, 2017 தண்டோரா குழு
வங்கி கணக்கு தொடங்க இனி ஆதார் எண் கட்டாயம்என மத்திய அரசு அதிரடி உத்திரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா குடிமகன்கள் அனவைரும் ஆதார் கார்டு கட்டாயம் எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறித்தி வருகிறது. இதுமட்டுமின்றி மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண் என அறிவுறித்தியும் வருகிறது.
இந்நிலையில்,வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கு இனி ஆதார் எண் கட்டாயம் எனவும் வரும் டிசம்பருக்குள் ஆதார் இணைக்கப்படாத வங்கி கணக்குகள் செல்லாது எனவும் மத்தியஅரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேலும், ரூ.50,000க்கு மேல் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய ஆதார் இனி ஆதார் எண் கட்டாயம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணை மத்திய அரசின் திட்டங்களுக்கு கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியுள்ளது குறிப்பிடத்தக்கது.