June 16, 2017
தண்டோரா குழு
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா எம்.ஜி.ஆர். அம்மா ஜெ.தீபா பேரவை என்ற பேரவையை துவங்கி இருந்தார்.
இந்நிலையில் சென்னை தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீபா,
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என பெயர் மாற்றம் செய்வதாகவும் ஓபிஎஸ் அழைப்புவிடுத்ததன் காரணமாகவே அவரை சந்தித்ததாகவும்கூறினார்.
மேலும்,பிரதமரை சந்திக்க நிச்சயம் நேரம் ஒதுக்குவார்கள் என நம்புகிறேன். பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய, திங்கட்கிழமை வரை தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்துள்ளது என்றார்.