June 17, 2017
தண்டோரா குழு
செல்போனுக்கு பதிலாக உப்பை அனுப்பிய பிளிப்கார்ட் ஊழியர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
நாட்டின் முன்னணி ஈகாரமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பெங்களூரை தலைமையாகக் கொண்டு இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்கிறது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் ஜெய்கணேஷ் மற்றும் சாம் திவாகர் ஆகியோர் டெலிவரி மேனாக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பிளிப்கார்ட்டில் போலி பெயரில் இல்லாத முகவரியை கொடுத்து 6 மொபைல் போன்களை ஆர்டர் செய்துள்ளனர்.
ஆனால் வாடிக்கையாளர்கள் செல்போனை வாங்க மறுத்து விட்டதாக கூறி அந்த பார்சல்களை பிளிப்கார்ட் நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். அந்த பார்சல்களில் செல்போனுக்கு பதிலாக டம்மி செல்போனையும், கல்உப்பு பொட்டலங்களையும் வைத்து பார்சலை பிரிக்காதது போல் வடிவமைத்து அனுப்பியுள்ளனர்.
இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் இந்த மோசடி நடந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.