• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆசிரியர்கள் சமூக நிகழ்வுகளை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் – கோவை மாவட்ட ஆட்சியர்.

June 17, 2017 தண்டோரா குழு

ஆசிரியர்கள் கல்வி போதிப்பது மட்டுமல்லாது பள்ளிக் குழந்தைகளை சமூகத்தில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லி எவ்வாறு அவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுதர வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது,

கோவை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு அன்றே அனைத்து பாடப்புத்தகங்களும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டன. தமிழக அரசு கல்விக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற மாணவ, மாணவியர்களுக்கு கல்விக்கு உதவியாக காலணி முதல் கணிணி வரையிலான 14 வகை கல்வி உபகரணங்கள், விலையில்லா மிதிவண்டிகள், பேருந்துபயண அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாணவ, மாணவியர்கள் அரசு வழங்கி வரும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு அதிக மதிப்பெண் எடுத்து படிக்கின்ற பள்ளிக்கு பெருமை சேர்ப்பதோடு தங்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் கல்வி போதிப்பது மட்டுமல்லாது பள்ளிக் குழந்தைகளை சமூகத்தில் தினந்தோறும் நடைபெறும் நிகழ்வுகளையும் எடுத்துச் சொல்லி எவ்வாறு அவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுதர வேண்டும். அப்பொழுது தான் மாணவ, மாணவியர்கள் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

முன் கூட்டியே திட்டமிட்டு கல்வி கற்க ஏதுவாக வருகின்ற கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு. 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு தேதிகளும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது. நூறு சதவீத தேர்ச்சி பெறுவதற்கு மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் தங்கள் பணியில் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், கோவை மாவட்டத்தில் 2017-2018ஆம் கல்வியாண்டில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயின்ற 1,92,339 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

1 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற 2,27,868 பள்ளி மாணவ, மாணவிர்களுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதன மற்றும் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரை பயின்ற மொத்தம் 1,19,854 மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள், மதிய உணவு வழங்கப்பட்டுள்ளன.”

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பள்ளி மாணவன் கார்த்திக் கூறுகையில்,

” நான் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறேன். என் அப்பா கூலி வேலை செய்து வருகிறார். எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாடி வருகின்றது. எனக்கு இலவச நோட்டு புத்தகங்கள், இலவச சீருடை, காலணிகள், சத்தான காய்கறிகள், மற்றும் முட்டைகள் கூடிய சத்தான உணவுகள், என படிப்பதற்கு ஏதுவான அனைத்து உபகரணங்களும் என் பள்ளியில் வழங்கப்பட்டது.

மேலும் நான் தினமும் பேருந்தில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் எனவே எவ்வித சிரமமுமின்றி பள்ளிக்கு சென்றுவர இலவச பேருந்து பயண அட்டை மூலம் பள்ளிக்கு சென்று வருகிறேன். என் கல்விக்காக, இதுபோன்ற அனைத்து வசதிகளையும் செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

இது குறித்து சௌமியா கூறுகையில்,

” 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை முன் கூட்டியே தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டு படிப்பதற்க ஏதுவாக இருக்கும். எங்களைப் போன்ற ஏழை, எளிய மாணவிகள மீது அக்கரை கொண்டு விலையில்லா பொருட்கள் வழங்கும் தமிழகஅரசிற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

மேலும் படிக்க