June 17, 2017 தண்டோரா குழு
மத்திய அரசுப்பணியாளர் நடத்தும் குடிமைப்பணிக்கான முதனிலை தேர்வாணயம் மையங்களில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் கண்கானிப்பு அலுவலரையோ, மாவட்ட ஆட்சியரையோ அல்லது 0422 – 2301114, 2301115, 2301116 என்ற தொடர்பு கொள்ளலாம் என்று கோவை மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நாளை முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளாக (upsc)குடிமைப்பணி முதனிலை போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
தேர்வுக்கான முன்னனேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தலைமையில், கோவை மாவட்ட தேர்வு கண்காணிப்பு அலுவலர் ஆனந்தராஜ் விஷ்ணுபாட்டில் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்வு கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில், “கோவை மாவட்டத்தில் 22 மையங்களில் மொத்தம் 8755 நபர்கள் இத்தேர்வினை எழுதுகின்றனர். இந்திய அரசு நடத்தும் தேர்வுகளில் மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக இத்தேர்வுகள் இருப்பதால் அனைத்து அலுவலர்கள் கவனமுடன் பணியாற்றிட வேண்டும்.
அனைத்து தேர்வாளர்களும் கண்டிப்பாக கணிப்பான், அலைப்பேசி போன்ற எவ்வித மின்னனு உபகரணங்கள் எடுத்துவரக்கூடாது. தேர்வறை கண்காணிபாளர்கள் இதை உறுதி செய்திடல் வேண்டும்.
காவலர்கள் போதிய அளவில் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் நியமிக்கப்பட்டு பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். தேர்வு மையங்களில் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுமாயின் கண்கானிப்பு அலுவலரையோ, மாவட்ட ஆட்சியரையோ அல்லது 0422 – 2301114, 2301115, 2301116 என்ற எண்களிலோ தேர்வாளர்கள், தேர்வு நடத்துவர்கள், அலுவலர்கள் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர் லட்சுமி , மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சிதம்பரம், மற்றும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.