June 19, 2017
tamilsamayam.com
ஜெயம் ரவி நடித்த ‘வனமகன்’ படமும், சிம்பு நடித்த ‘ஏஏஏ’ படமும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இந்தப் படத்தில் நடிகைகள் ஸ்ரேயா, தமன்னா இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார்.படம் ஜூன் 23ம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவியின் ‘வனமகன்’ படம் ஜுன் 23-ம் தேதி வெளியாக உள்ளது. எனவே ‘ஏஏஏ’ படத்தைவிட ‘வனமகன்’ படத்துக்கே அதிக தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது
மேலும் வரும் 30-ம் தேதி செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படமும், கௌதம் கார்த்திக்கின் இவன் தந்திரன் என்ற படமும் வெளியாக உள்ளது.