• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பூச்சிக்கொல்லி அதிகமாகப் இருக்கும் சீன உணவுகள்.

May 13, 2016

சீனாவில் தயாரிக்கப்படும் எலக்டிரிக் சாதனங்கள் மட்டுமல்ல, உணவுப் பொருட்களும் கூடத் தரமற்றவை தான் என உலக அளவில் தெரியவந்துள்ளது. பல உணவுகள் தரமாக தோற்றமளிக்க வேண்டும், சீக்கிரம் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் பிளாஸ்டிக் கலப்பு செய்து சீனாவில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த மூலப்பொருளை உணவுப் பொருட்களில் கலப்பதால், நமது உடலில் பல தீய ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். மற்றும் செரிமான பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது, பெண்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாகும் அபாயமும் இருக்கிறது.

பிளாஸ்டிக் அரிசி:

உலக மக்களை அனைவரையுமே சீனர்கள் அதிர வைத்தது இந்த விசயத்தில் தான். சீனாவில் முழுக்க, முழுக்க பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் அரிசி விற்பனை செய்யப்படுகிறது. இது முற்றிலும் விஷத்தன்மை கொண்டது ஆகும். ஆனால் இதைப்பற்றி சின அரசாங்கம் எந்த நடவடிக்கையும் இல்லை.

பச்சை பட்டாணி:

இது மற்றுமொரு சீனாவின் போலி தயாரிப்பு. சோயா பீன்ஸ், பச்சை நிற டை மற்றும் சோடியம் (Sodium Metabisulfite) கலந்து பயன்படுத்தி போலி பச்சை பட்டாணி உற்பத்தி செய்து விற்றது சீனா. இந்த வகை பச்சை பட்டாணியால் புற்றுநோய் அபாயம் அதிகம் எனப் பின்னர் தெரியவந்தது.

மண் மிளகு:

ஒரு சீன மிளகு விற்பனையாளர், மண்ணைக் குழைத்து அதை மிளகு போல செய்து விற்று வந்துள்ளார். அதில் வெள்ளை மிளகு என எழுதி வைத்து விற்றுள்ளார். சீனாவில் உணவு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரம் குறித்த சரியான சட்டங்கள் இல்லாமல் இருப்பது தான் இது போன்ற பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

சீன உப்பு:

சீனாவில் தயாரிக்கப்படும் இண்டஸ்ட்ரியல் உப்பு மனநலன் மற்றும் உடல்நலன் என இரண்டையும் வெகுவாக பாதிக்கக்கூடியது ஆகும். சீனா மற்றும் அல்ல. மற்ற உலக நாடுகளில் தயாரிக்கப்படும் இண்டஸ்ட்ரியல் உப்புகளிலும் இந்தத் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது.

காளான்:

சீக்கிரம் கெட்டுப்போகாமல் இருக்கச் சீனாவில் இருந்து தயாரிக்கப்படும் காளான்களில் அதிக பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படுகின்றன. மேலும், சீனாவில் தயாரிக்கப்படும் 34% காளான்கள் இயற்கைக்கு மாறாக முற்றிலும் போலியாக தயாரிக்கப்படுகிறது.

சீன பூண்டு:

சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பூண்டுகளில் அதிக பூச்சிக்கொல்லி சேர்க்கப்படுகிறது. மேலும், இது நீங்கள் உண்ட பிறகு உடலில் கலக்கும் போது தீய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக விளங்குகிறது.

சீன ஆப்பிள் ஜூஸ்:

சீனாவில் பெட்டிகளில் அடைத்து விற்கப்படும் ஆப்பிள் ஜூஸ்கள் உலகெங்கிலும் 50% வரை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றில் அதிகளவிலான பூச்சிக்கொல்லி சேர்க்கப்படுகிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் செயற்கை சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடியது ஆகும்.

சீன சிக்கன்:

2013-ம் ஆண்டு அமெரிக்க வேளாண் துறை சீன சிக்கன் விற்க அனுமதி அளித்து. பின்னர் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் சிக்கன் உணவுகளில் மற்ற நாடுகளைவிட அதிகப்படியான பூச்சிக்கொல்லி இருப்பதைக் கண்டறிந்தது. மேலும், இது பெருமளவில் உடல்நல பாதிப்பை உண்டாக்குகிறது எனவும் தெரியவந்தது.

எனவே நாம் அனைவரும் எந்த உணவுப் பொருளை வாங்கும்பொழுதும் அது சுத்தமானதா மற்றும் எந்தக் கலப்படம் இல்லாதவாறு உள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

மேலும் படிக்க