• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக அமிதாப்பச்சன்

June 20, 2017 தண்டோரா குழு

ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரே தேசம், ஒரே வரி, ஒரே சந்தை என்ற அடிப்படையை கொண்ட ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதையடுத்து, ஜி.எஸ்.டி. விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை மத்திய அரசு நியமித்துள்ளது.

மக்களின் வாழ்வில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் மத்திய அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளை ஊக்குவிப்பதில் அமிதாப்பச்சன் பிரபலமாக விளங்குகிறார்.மேலும் அமிதாப்பச்சன் தோன்றி உரையாற்றும், 40 விநாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதில் “தேசிய கொடியின் மூன்று வண்ணங்கள் இருப்பதைப் போல ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தையை ஒருங்கிணைந்த சக்தியாக உருவாக்குவதற்காக எடுக்கப்பட்ட முயற்சி தான் ஜி.எஸ்.டி ” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க