June 20, 2017 தண்டோரா குழு
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நோயாளிகளை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்ல வேண்டுமானால் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் பல பகுதிகளில் ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்படுவதால், மக்கள் பல வேதனையான சூழ்நிலைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், அந்த சேவையை இன்னும் கடினமாக மாற்ற உத்தர் பிரதேஷ் மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஒருவருக்கு ஆம்புலன்ஸ் இலவச சேவை பெறுவதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாகியுள்ளது.
நோயாளியை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்றால், அந்த நோயாளியின் வீட்டாரோ அல்லது உறவினர்களை அவர்களின் ஆதார் அட்டையை காட்டினால் மட்டுமே நோயாளியை ஆம்புலன்ஸில் ஏற்றப்படுவார்கள்.
இது குறித்து உ.பி சுகாதார அதிகாரிகள் கூறுகையில்,
“ஆதார் அட்டையை கட்டயமாகப்படுவதால், வாகனங்களில் மோசடி பயன்பாட்டை குறைக்க உதவும். அதோடு, போலி பயணங்கள் மற்றும் எரிப்பொருள் பணத்தை வீணாக ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் செலவு செய்கின்றனர். இது போன்ற தவறான செயல்களால் ஆதார் அட்டை கட்ப்படாயமாக்கப்படுகிறது.” என்று கூறினார்.
மேலும்க கடந்த மாதம், உத்தரபிரதேஷ் மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையினல் மருத்துவர்கள் உதவி அளிக்காத காரணத்தால், ஏழை தொழிலாளர் ஒருவர் தனது 15 வயது மகனை தனது தோளில் சுமந்து செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது.
அதே போல், அதே மாநிலத்தின் குஷம்பி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையிலிருந்து தனது தம்பியின் 7 மாத பெண் குழந்தையின் உடலை ரிக்க்ஷா மூலம் வீட்டுக்கு கொண்டு செல்ல நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.