June 20, 2017
தண்டோரா குழு
தெலுங்கு திரையுலக பீஷ்மர், கே.விஸ்வநாத் இயக்கத்தில் மெகா ஹிட்டான படம் ‘சங்கராபரணம்’. இந்த படம் வருட கணக்கில் ஓடி சாதனை படைத்தது.
இதையடுத்து, இந்த ஆண்டு முதல் அதன் நினைவாக “சங்கராபரணம் விருது” வழங்கப்பட உள்ளது. இவ்விருது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் திரையுலக பிரபலங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
அதன்படி, தமிழில் பா.பாண்டி படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான விருது தனுஷ்க்கு வழங்கப்படுகிறது.
தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குனருக்கான விருதை தனுஷ் பெறவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.