May 13, 2016
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்குக் கனவில் கூட நினைக்க முடியாத ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தது. ஒரு வங்கி அவளுக்கு அதிகப்படியான பண இருப்பை வழங்கியது அதிர்ச்சி அளித்தது.
கிறிஸ்டின் ஜியாசின் லீ (21), ரசாயன பொறியியல் மாணவி. அவளுடைய 18 வது பிறந்த நாளிற்கு முன், வேச்ட்பாக் வங்கியில் இருந்து அவளுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது. அக்கடிதத்தைப் பிரித்து பார்த்த போது மிகப்பெரிய தொகை அவளுக்குக் கிடைத்ததை கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தாள்.
தான் கொஞ்சமும் எதிர்பார்க்காத பொக்கிஷம் தன் வாழ்க்கையைத் தலை கீழாக மாற்றியதை எண்ணி எண்ணி பூரிப்படைந்தாள். கிடைத்த பணத்தை அப்படியே வைக்க மனமில்லாமல் ஜூலை 2014 முதல் ஏப்ரல் 2015 வரை சிறு சிறு தொகையாக அவளுடைய வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துத் தான் விரும்பிய கைப்பை மற்றும் ஆடம்பரமான பொருள்களை வாங்கினாள். இதற்காக மட்டும் சுமார் 70,000 அமெரிக்க டாலர் செலவு செய்து உள்ளாள்.
கடந்த 2012ம் ஆண்டு பண மோசடி குறித்து வல்லுநர்கள் விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள். விசாரணை முடிவில் க்ரிச்டினை அடையாளம் கண்டுகொண்டனர்.
அவரைக் கைது செய்ய வாரன்ட் இந்த ஆண்டு மார்ச்சில் தான் பிறப்பிக்கப்பட்டது. மலேசியா செல்வதற்காக ஆஸ்திரேலியாவின் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருந்த போது க்ரிச்டினை போலீசார் கைது செய்தனர். அவள் மோசடி செய்து நிதி அனுகூலத்தைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி லிசாச்டேபெல்டன் அவளுக்கு ஜாமீன் வழங்கினார். கிறிஸ்டின் வேண்டும் என்று பணத்தை எடுக்கவில்லை மாறாக வங்கி தான் அவளுக்குத் தந்தது என்று லிசா ச்டேபெல்டன் தெரிவித்தார்.
அவளுக்குக் கிடைத்த பணத்தில் இருந்து அந்த மாணவி சுமார் 3.4 கோடி ரூபாயை எடுத்ததில் எந்தத் தவறும் இல்லை என்று அந்த நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் கூறினார். மேலும், லீ வங்கியை ஏமாற்றி பணத்தை எடுத்தாளா அல்லது அவளுக்குச் சொந்தமானதை உரிமையோடு எடுத்துக் கொண்டாளா என்று உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏமாற்றியது உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டால் அதிகமான அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.