• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெரிய தலையுடன் பிறந்த திரிபுரா சிறுமி மரணம்

June 21, 2017 தண்டோரா குழு

திரிபுரா மாநிலத்தில் இரண்டு மடங்கு பெரிய தலையுடன் பிறந்த சிறுமி மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தது.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ரோனா பேகம், ஹைட்ரோசெஃபாலுஸ் (Hydrocephalus) என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டார். இதனால், அவளுடைய மூளையில் நீர் கோர்த்து, சாதாரண குழந்தையின் தலையை விட இரண்டு மடங்கு பெரியாதாக இருந்தது.

ரோனாவின் தாய் பாத்திமா பேகம் கூறுகையில்,

“ரோனாவின் தலை 94 சென்டிமீட்டர் சுற்றளவு இருந்தது. இதன் காரணமாக மூளையில் அழுத்தம் ஏற்படுவதால், அவளாள் எழுந்து உட்கார முடியவில்லை. அவளுக்கு புதுதில்லியிலுள்ள போர்டிஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை அளித்தனர். அவர்களுடைய முயற்சியால் ரோனாவின் தலையின் சுற்றளவு 58 சென்டிமீட்டராக குறைந்தது.

அதன்பிறகு ரோனா நன்றாக தான் இருந்தாள், ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென முச்சு திணறல் ஏற்ப்பட்டது. பணிக்கு சென்றிருந்த என் கணவரை தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு, உடனே வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அவரும் வீடு திரும்பி, ரோனாவுக்கு குடிக்க சிறிது தண்ணீர் கொடுத்தார். அவளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன், இறந்துவிட்டாள்” என்று கூறினார்.

மேலும் கடந்த 2௦13ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த “Agence France Presse” என்னும் பத்திரிக்கை புகைப்பட நிபுணர், ரோனாவை புகைப்படம் எடுத்து, புதுதில்லிலுள்ள ஒரு மருத்துவமனை அவளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டுமென்று குரல் கொடுத்தார். அவளுடைய புகைப்படம் வெளியாக தொடங்கியது, உலக கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க