June 21, 2017 தண்டோரா குழு
சவுதி அரேபியாவின் இளவரசர் பதிவியிலிருந்து முகம்மது பின் நயிப் பின் அப்துல்யாசில் விடுவிக்கப்பட்டு, புதிய இளவரசராக முகமத் பின் சல்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மன்னராட்சி நடைபெறும் சவுதி அரேபியாவில், இளவரசர் பதவியில் முகமத் பின் அப்துல்யாஸின் பதவியில் இருந்தார். அப்பதவியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு,துணை இளவரசராக பதவி வகித்து வந்து முகம்மது பின் சல்மான் புதிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய இளவரசரை சேர்ந்தெடுப்பதற்கான நடைபெற்ற கூட்டத்தில் முகம்மது பின் சல்மானுக்கு 43 பேரில் 31 பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
அரச சட்டத்தின் படி, புதிய இளவரசர் முகமத் பின் சல்மான் நாட்டின் பிரதமராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருப்பார்.
மேலும்,முகமத் பின் சல்மான் துணை இளவரசர் பதவியில் இருந்த போது, ஏமன் நாட்டில் நடந்த சவுதி அரேபிய போரை நடத்தவும், எண்ணெய் வர்த்தகத்தை தொடர்ந்து ராஜ்யத்தின் எதிர்கால திட்டங்களை வகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.