June 21, 2017
தண்டோரா குழு
அட்லீ இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா மற்றும் பலர் நடித்து வரும் படம் மெர்சல். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
விஜய் தன் ரசிகர்களின் சந்தோஷத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றே சொல்லலாம். சமீபகாலமாக விஜய் ரசிகர்கள் அனைவரும் விஜயை தளபதி என்று தான் அழைத்து வருகின்றனர்.
அந்த வகையில் எப்போதும் ‘இளைய தளபதி’ விஜய் என்று தான் டைட்டிலில் போடுவார்கள்.ஆனால், இந்த முறை ‘தளபதி’ விஜய் என்று தான் டைட்டில் வைத்துள்ளனர். இவை விஜய் ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.