June 22, 2017
தண்டோரா குழு
சிறுமுகை வனப்பகுதியில் சிகிச்சை பெற்று காட்டுக்குள் சென்ற வயதான பெண் யானை மீண்டும் ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம் அருகே பவானிசாகர் அணை நீர்தேக்க பகுதியில் செவ்வாய்க்கிழமை தண்ணீர் அருந்த வந்த யானை கூட்டத்தில் இருந்து வயதான பெண் யானை உடல் சோர்வால் மயங்கி விழுந்தது.
அதன் பின் சிறுமுகை வனத்துறையினர் மற்றும் வனத்துறை கால்நடை மருத்துவர்களின் சிகிச்சையால் புதன்கிழமை அதிகாலை மீண்டும் எழுந்து காட்டுக்குள் சென்றது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஆற்றில் தண்ணீர் அறுந்த வந்த அந்த பெண் யானை ஆற்றில் ஓரம் மயங்கி விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க திட்டமிட்டனர். ஆனால் யானை சிகிச்சை தொடங்கும் முன்பே இறந்துவிட்டது.