June 22, 2017
tamilsamayam.com
ஓரம்போ, வா குவார்ட்டர் கட்டிங் ஆகிய தோல்விப்படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி.
கணவன் மனைவியான இவர்களின் இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி இருவரும் இணைந்து நடிக்கும் படம் ‘விக்ரம் வேதா’. இப்படத்தில் மாதவன் போலீஸாக நடிக்க, விஜய்சேதுபதி கேங்ஸ்டராக நடிக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார்.
படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட வேலைகள் நடந்து வரும் இப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவனும், விஜய்சேதுபதியும் முதன் முதலாக இணைந்து நடிக்கும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகவிருக்கிறது. இன்று நடிகர் விஜய் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.