June 22, 2017
தண்டோரா குழு
சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு உலக அளவில் பயனாளர்கள் உள்ளனர். அதிலும் இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஃபேஸ்புக் பயன்படுத்தும் பெண்கள் பெரும்பாலும் தங்களது சொந்தப் படங்களை புரொஃபைல் பிக்சராக வைப்பதில்லை. காரணம் அதை யார் வேண்டுமாலும் அந்த புகைப்படத்தை எடுத்து பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வசதிகள் உள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் பெண்கள் தங்கள் புகைப்படங்களை புரொஃபைல் பிக்சராக வைப்பதில்லை என ஃபேஸ்புக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனை சரிசெய்யும் வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் சில பாதுகாப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவில் இருக்கும் ஃபேஸ்புக் பயனாளிகளுக்கு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.