June 23, 2017 தண்டோரா குழு
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா முழுக்க 30 நகரங்களை மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மீண்டும் ஒரு பட்டியலை வெளியிட்டார்.
இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள மொத்தம் 30 நகரங்களில் தமிழத்திலிருந்து திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி ஆகிய 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது.
ஸ்மார்ட் சிட்டிகளில் குடிநீர், மின்சார விநியோகம், திடக்கழிவு மேலாண்மை, சுகாதார வசதி, போக்குவரத்து வசதி, வீட்டு வசதி, குறிப்பாக ஏழைகளுக்கு வீட்டுவசதி, அனைத்து வளாகங்களிலும் தகவல் தொடர்பு வசதிகள் அமைக்கப்படும்.மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள் வளர்ந்த நாடுளில் உள்ள நகரங்களைப் போன்று அனைத்து ஹை டெக் வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
இன்று வெளியான ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இடம்பெற்ற நகரங்கள்:
01. திருவனந்தபுரம்(கேரளா)
02. நய ராய்ப்பூர்(சத்தீஸ்கர்)
03. ராஜ்கோட்(குஜராத்)
04. அமராவதி(மகாராஷ்டிரா)
05. பாட்னா(பீஹார்)
06. கரீம்நகர்(தெலுங்கானா)
07. முஜாபர்புர்(பீஹார்)
08. புதுச்சேரி
09. காந்திநகர்(குஜராத்)
10. ஸ்ரீநகர்(காஷ்மீர்)
11. சாகர்(ம.பி.,)
12. கர்நல்(அரியானா)
13. சாட்னா(ம.பி.,)
14. பெங்களூரு(கர்நாடகா)
15. சிம்லா(இமாச்சல பிரதேசம்)
16. டேராடூன்(உத்தரகாண்ட்)
17. திருப்பூர்(தமிழகம்)
18 பிம்ப்ரி சின்ச்வாத்(மகாராஷ்டிரா)
19. பிலாஸ்புர்(சத்தீஸ்கர்)
20. பசிகாட்(அருணாச்சல பிரதேசம்)
21. ஜம்மு(காஷ்மீர்)
22. தாகோத்(குஜராத்)
23. திருநெல்வேலி(தமிழகம்)
24. தூத்துக்குடி(தமிழகம்)
25. திருச்சி(தமிழகம்)
26. ஜான்சி(உ.பி.,)
27. அயிஸ்வால்(மிசோரம்)
28.அலகாபாத்(உ.பி.,)
29. அலிகார்க்(உ.பி.,)
30.காங்க்டாக்(சிக்கிம்)