June 23, 2017 தண்டோரா குழு
அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
1967-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய பாஸ்போர்ட் சட்டத்தின் 50 ஆண்டு நிறைவையொட்டி தலைநகர் டெல்லியில் விழா நடைபெற்றது. இவ்விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
அனைத்து பாஸ்போர்ட்டுகளிலும் இனி ஆங்கிலத்துடன்,இந்தி மொழியும் இடம்பெறும் என அறிவித்தார். மேலும் 8 வயதிற்குட்பட்டோர், 60 வயது மேற்பட்டவர்களுக்கும் 10 சதவீத விமானக் கட்டணம் குறைக்கப்படுகிறது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
ஏற்கனவே இந்தி திணிப்பு வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்று தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள் குரல் கொடுத்து வருகிறது.இதனிடையே சுஷ்மா ஸ்வராஜின் இந்த அறிவிப்பு அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.