June 24, 2017
தண்டோரா குழு
இறைவி படத்திற்கு பிறகு நீண்ட நாட்களாக படம் எடுக்காமல் ஒதுங்கியிருந்த கார்த்திக் சுப்புராஜ் சத்தமில்லாமல்பிரபுதேவாவை கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார்.
மெர்குரி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஒரு குறுகியகாலபடப்பிடிப்பு கொண்ட படம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பிரபுதேவா வில்லன் கதாபாத்தித்தில் நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில காட்சிகளே மீதமுள்ள நிலையில், இந்த படத்தை வித்தியாசமான முயற்சியாக வசனமே இல்லாமல் உருவாக்கி இருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழில் நடிகர் கமலஹாசன் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த முயற்சியை “பேசும்படம் ” என்ற திரைப்படத்தின் மூலமாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.