June 24, 2017 தண்டோரா குழு
மஹாரஸ்டிரா மாநிலத்தில் ரூ.34,000 கோடி அளவுக்கு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மகாராஸ்டிரா மாநில விவசாயிகள் தங்கள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு உரிய விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பல்வேறு வலியுறுத்தி 11 நாட்களாக போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், மஹாரஸ்டிரா மாநிலத்தில் ரூ.34,000 கோடி அளவுக்கு விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வதாக முதலமைச்சர்தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.1.5 லட்சத்துக்குக் குறைவான விவசாயிகள் கடன்களை முழுமையாகத்தள்ளுபடி செய்வதாகவும் விவசாயி கடன்களை முறையாகச் செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் தொகையில் 25 சதவீதம் திரும்ப அளிக்கப்படும் என்றும் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், நிதிச்சுமையைக் குறைக்க மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள், தங்களது ஒரு மாத ஊதியத்தினை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்கோரிக்கைவிடுத்துள்ளார்.