June 27, 2017
tamilsamayam.com
கடவுள் குறித்த விமர்சனங்களில், ஏற்கனவே சர்ச்சையில் பல முறை சிக்கிய கமலஹாசன் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் 14 பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என ஆரவாரமாய் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால் திடீர் சஸ்பென்ஸாக 15வது நபராக நமீதா கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், நமீதாவுடன் பேசிய தொகுப்பாளர் கமல். சமீபகாலமாக ஆன்மீகத்தில் நமீதா மிகவும் நாட்டம் கொண்டுள்ளது குறித்து கேட்டார். அப்போது, “கடவுளிடம் பேசுவீர்களா” என்றார். அதற்கு நமீதா, “ஆமாம்” என்றார்.
இதற்கு கமல், “கடவுளிடம் நாம் பேசினால் பக்தி. கடவுள் நம்மிடம் பேசினால் பைத்தியம்!” என சொல்லி சிரித்தார். இந்த கருத்துக்கு நமீதா டென்ஷன் ஆகிவிட்டார். இருந்தாலும் மலுப்பியபடி சிரித்தார்.
“சமீபத்தில் மகாபாரதம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார் கமல். இந்நிலையில் பக்தி, பைத்தியம் என பேசி சர்ச்சையை கிளப்புகிறார். ’இது தேவையா’ என கமல் ரசிகர்கள் கருதுகிறார்கள்.