June 27, 2017
தண்டோரா குழு
இங்கிலாந்திலுள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் டிரௌசர் அணிய தடை விதித்தால், மாணவிகள் அணியும் குட்டிப்பாவடை அணிந்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
இங்கிலாந்தில் தற்போது அதிக வெப்பம் இருப்பதால், அங்குள்ள ஒரு பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு டிரௌசர் அணிந்து வந்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் அதை கண்டித்து, மாணவர்கள் பள்ளிக்கு டிரௌசர் அணிந்துக்கொண்டு வரகூடாது என்று தடை விதித்தது. இதனால் கோபம் கொண்ட மாணவர்கள் மாணவிகள் அணியும் குட்டிப்பாவடை அணிந்துக்கொண்டு பள்ளி வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அப்பள்ளி மாணவன் ஒருவனின் தாய் கூறுகையில், “மாணவர்கள் டிரௌசர் அணிந்துக்கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது என்றும் வேண்டுமென்றால் மாணவிகள் அணியும் குட்டிப்பாவடையை அணிந்துக்கொண்டு வரலாம் என்றும் டிரௌசர் அணிந்துக்கொண்டு பள்ளிக்கு வந்தால், அவர்களை தனி அறையில் பூட்டப்படுவார்கள் என்று அவனுடைய வகுப்பு ஆசிரியர் தெரிவித்துள்ளார்” என்று கூறினார்.
பள்ளியின் நிர்வாகம் அறிவித்த தடையை எதிர்த்து, அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் குட்டிப்பாவடை அணிந்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.