June 27, 2017
தண்டோரா குழு
நதிகளை இணைப்பதில் கவனம் செலுத்தி அந்த பணிகளை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க ஸ்டாலின் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் இநாப்பு பிரச்னைகளால் தமிழக விவசாயிகள் மிகுந்த துயரத்தை சந்தித்து வருவதாக கூறியுள்ளார். தமிழகத்திற்கான நீர் ஆதாரங்களை முடக்குவதும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் ஒப்பந்தங்களை மீறி தடுப்பணைகளை கட்டுவதும்,
மேலும், கேரளா அரசும், ஆந்திரா அரசும் முல்லை பெரியாறு மற்றும் பாலாற்றின் மீது தடுப்பணை கட்டுவது உள்ளிட்டவை நடைபெற்று வருவதால் நதி நீர் இணைப்புதான் இதற்கு உன்னத தீர்வு என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அதற்கான பணிகளில் மத்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக நதி நீர் இணைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் பெற்று நிறைவேற்ற வேண்டிய தேவை உள்ளது. தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்ற வேண்டும்.
ஆகையால், மாநிலங்களுக்கு இடையேயான நதிகளை இணைப்பதோடு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.