June 27, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்று முதல் ஜூலை 7 வரை மருத்துவ படிப்புக்களுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் மருத்துவக் படிப்புகளுக்குஇந்த கல்வியாண்டில் நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் 85 சதவீத இடங்கள் தமிழக பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும்,15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது எனவும் சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அதில் உள்ள 3,050 எம்.பி.பி.எஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 456 இடங்கள் போக,மாநில அரசுக்கு 2,594 இடங்கள் உள்ளன.
இதில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர் களுக்கு 2,203 இடங்களும், மத்திய பாடத்திட்டங்களில் படித்தவர்களுக்கு 391 இடங்களும் ஒதுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.