June 27, 2017
தண்டோரா குழு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இயக்கத்தில் ‘கோச்சடையான்’ படத்தை இயக்கியதை அடுத்து, தற்போது தனுஷின் ‘வி.ஐ.பி-2’ படத்தினை இயக்கியுள்ளார்.
சமீபத்தில் ‘வி.ஐ.பி-2’ படத்தின் ஆடியோ ரிலீஸ் மும்பையில் நடைபெற்றது. அப்போது, பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்,
“என் அடுத்த படத்தின் வேலைகளை துவங்கியுள்ளேன். தற்போது, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்னும் கதையினை எழுதியுள்ளேன். இந்த படத்தின் நடிகர்கள் குறித்து தேர்வு நடத்தி கொண்டிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் என்னுடைய அடுத்த படம் பற்றிய முழு தகவல் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.