• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சரை 2199கோடி ரூபாய் கொடுத்து தக்கவைத்த செல்போன் நிறுவனம் !

June 27, 2017 தண்டோரா குழு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரை 2199 கோடி ரூபாய் கொடுத்து விவோ நிறுவனம் 5 வருடம் தக்க வைத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு ஏதுமின்றி தான் இத்தொடர் துவங்கப்பட்டது.

ஆனால், தற்போது கிரிகெட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகின் முன்னணி டி20 கிரிக்கெட் லீக் தொடராக ஐபிஎல் விளங்கி வருகிறது. இதில் பங்கேற்கும் வீரர்களுக்கு அணி உரிமையாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வாரி வழங்குகின்றனர். இதனால் சர்வதேச போட்டியில் விளையாடுவதை விட ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஐபிஎல் இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சரை பெறுவதிலும் முன்னணி நிறுவனங்களுக்கு மத்தியில் பெரும் போட்டி நிலவி வந்தது.

ஐ.பி.எல். தொடர் தொடங்கிய போது 2008-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை கட்டுமான நிறுவனமான டி.எல்.எஃப். குரூப் டைட்டில் ஸ்பான்சராக இருந்தது. அதன்பின் ஐந்து வருடத்திற்கு 396 கோடி ரூபாய் என பெப்சி நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரை பெற்றது.அதனைத்தொடர்ந்து பெப்சியிடம் இருந்து 2014-15-ல் விவோ நிறுவனம் டைட்டில் ஸ்பான்சரை பெற்றது. எனினும், விவோவின் டைட்டில் ஸ்பான்சார் காலம் இந்த வருடத்தோடு முடிவடைந்தது.

இதையடுத்து, பிசிசிஐ 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை அடுத்த ஐந்து ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சருக்கு டெண்டர் கோரியது. இதனைப்பெற விவோ, ஓப்போ ஆகிய செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் ஆர்வம் காட்டினர்.இறுதியில், ஓப்போவை விட விவோ அதிக தொகைக்கு கோரியிருந்தது. இதனால் விவோவிற்கு அடுத்த ஐந்து ஆண்டுக்கான டைட்டில் ஸ்பான்சர் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக விவோ 2199 கோடி ரூபாய் கொடுக்க இருக்கிறது. இது கடந்த முறையை விட 554 சதவீதம் அதிகமாகும்.ஓப்போ 1430 கோடி ரூபாய்க்கு விருப்பம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க