June 27, 2017 தண்டோரா குழு
தனியார் மற்றும் ஆவின் நிறுவன பால் பொருட்களை சோதித்து பார்க்கலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாவல் விடுத்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்கின்றன என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் தெரிவித்தார். இதனை தனியார் நிறுனங்கள் மறுத்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சென்னை பசுமைவழிச்சாலையில்செய்தியாளர்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்தார். அப்போது, நெஸ்லே டுடே பால் பவுடரில் காஸ்டிக் சோடா, பிளீச்சிங் பவுடர் உள்ளதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் ரிலையன்ஸ் நிறுவன பால் பவுடரிலும் ரசாயனம் உள்ளதாக ஆய்வில் உறுதி செய்யப்பட்டது என்று கூறினார்.
மேலும், கெட்டுப்போன பாலை காஸ்டிக் சோடா சேர்ந்து பவுடராக்கி விற்கின்றனர். இதனை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சோதனைக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. பால் பவுடராக தயாரிக்கப்படும் அனைத்துமே கெட்டுப்போன பால்தான்.
ஆனால் ஆவின் பால் பொருட்கள் மிகவும் தரமானவை என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.ஆவின் பாலில் எந்த கலப்படமும் இல்லை என்று சோதனைக் கூட அறிக்கை கூறுகிறது.ஆவின் பால்பொருட்களையும், தனியார் நிறுவன பால்பொருட்களையும் சோதித்து பார்க்கலாம்.
எனவே ஆவின் பாலில் எந்த கலப்படமும் இல்லை என நான் உறுதியாக கூறுகிறேன். தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்வது தெரியவந்தால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடம் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போன். எனினும் முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.