June 28, 2017
தண்டோரா குழு
கோவை குற்றாலத்திற்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக மழை பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் நேற்று பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இதில் அதிகபட்சமாக கோவையில் 7 செ. மீ மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பலத்த மழை பெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளம் அதிக அளவில் விழுகிறது. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குற்றாலத்திற்கு வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.