June 28, 2017
tamil.samayam.com
தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, காஜோல் நடித்துள்ள வேலை இல்லா பட்டதாரி இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதுவரை ஒரு படத்தின் டிரெயிலரை யூடியூப்பில் மட்டுமே ரசிகர்கள் கண்டு களிப்பார்கள். ஆனால், தற்போது பேஸ்புக்கிலும் பார்க்க துவங்கியுள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை தனுஷ் தனது தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அந்த வீடியோவை இதுவரை 47 லட்சம் பேர் பார்த்துள்ளனர். யூடியூப்பில் 37 லட்சம் பேர் பார்த்துள்ளனர். தவிர, தெலுங்கு டிரெய்லரை யூடியூப்பில் 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். எனவே, மொத்தமாக இப்படத்தின் வீடியோவை இதுவரை 1 கோடிக்கும் மேல் பார்த்துள்ளனர்.
இந்த செய்தி விஐபி-2 படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.