June 28, 2017 தண்டோரா குழு
ஹரியானா மாநிலத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு டிரம்ப்பின் பெயர் வைக்கப்பட்டதாக எழுந்த தகவலையடுத்து, மாவட்ட நிர்வாகம் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தின் மீவாட் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு சுலாப் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சூட்ட திட்டமிட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த அம்மாவட்ட நிர்வாகம், ‘இது சட்ட விரோதமானது என்றும், டிரம்பின் பெயர் குறிப்பிடப்பட்ட பலகையை நீக்க வேண்டுமென்றும் அந்த நிறுவனத்தின் உறுப்பினர்களுக்கு கட்டளையிட்டுள்ளனர்.
“அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் மற்றும் என்.ஆர்.ஐ. ஆகியவற்றிடமிருந்து நிதி திரட்ட அந்த கிராமத்திற்கு டிரம்பின் பெயரை சூட்டவுள்ளதாக ‘சுலாப்’ நிறுவனம் அறிவித்தது.
மேலும்,கிராமத்திற்கு பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக தொண்டு நிறுவனத்தினர் யாரிடமும் அனுமதி பெறவில்லை எனவும், அதனால் இந்த செயல் முறைகேடானது என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்தார். இதையடுத்து தொண்டு நிறுவனத்தினர் பெயர் மாற்றம் செய்யும் நடவடிக்கையை கைவிட்டு, விளம்பர பலகைகளை அகற்றினர்.