June 28, 2017
தண்டோரா குழு
தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைப்படும் நயன்தாரா தற்போது இளம் நடிகர் அதர்வாவுடன் இணைந்து இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அதர்வாவை விட கனமான கதாபாத்திரத்தில் நயன்தாராவும் நடித்து வருகிறாராம்.
இந்தத் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், மெட்ரோ ரயில் இடம்பெறுகிறது.
முதலில், சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் மெட்ரோ ரயிலில் படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். அதன் பின் நயன்தாராவின் கோரிக்கையை ஏற்ற படக்குழுவினர் பெங்களூருவில் உள்ள மெட்ரோ ரயிலில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படம் வெளிவந்தால், இன்னும் ஐந்து வருடங்களுக்கு நயன்தாராவை அசைக்கவே முடியாதாம்.