June 29, 2017 தண்டோரா குழு
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின் 6 முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழையத் தடை விதித்து உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப் உத்தரவுகளை பிறப்பித்தார். அதில், சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்கும் விதமாக சிரியா, சூடான், லிபியா, ஈரான், சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைவதற்கு விசா வழங்க சில மாதங்களுக்கு தடை பிறப்பித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் அதிபரின் உத்தரவை அமல்படுத்த தடை விதித்ததால் இந்த 6 நாட்டை சேர்ந்தவர்கள் தங்களின் நெருங்கிய உறவினரை பார்ப்பதற்காகவும், தொழில் ரீதியாகவும் அமெரிக்கா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.