June 29, 2017 தண்டோரா குழு
புதிதாக ரூ.200 தாள்களை அச்சடிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக கடந்த 2017 நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தார். இதனால் ஏற்படக்கூடிய பணச்சுழற்சி சிக்கலைத் தவிர்ப்பதற்காக 2000, 500 ரூபாய் மதிப்பில் புதிதாக கரன்சி நோட்டுகளை ரிசர்வ் வங்கி உடனடியாக அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.
இந்நிலையில் தற்போது புதிதாக ரூ.200 தாள்களை அச்சடிக்கும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மகாராஷ்டிர மாநில நாசிக், மத்தியப்பிரதேச மாநில ஒசாங்காபாத் பண அச்சடிப்பு ஆலைகளிலும், ரிசர்வ் வங்கியின் கீழுள்ள பாரதிய ரிசர்வ் பாங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடேட் நிறுவனத்தின் மூலமும் புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றது.
500, 2000 உள்ள சிறப்பு அம்சங்களைக் காட்டிலும் கூடுதல் நுணுக்கங்களுடன் இந்த புதிய 200 நோட்டுகள் அச்சடிக்கப்படுள்ளது.
200 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது குறித்து கடந்த மார்ச் மாதமே ரிசர்வ் வங்கி முடிவெடுத்து விட்டது. தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.மக்கள் புழக்கத்துக்கு விரைவில் 200 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.