June 29, 2017
tamilsamayam.com
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, மனைவி பிரியங்காவுடன் நெதர்லாந்தில் சந்தித்தார்.
சாம்பியன்ஸ் டிராபிக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியில் இந்திய கிரிக்கெட் வீரர் ரெய்னாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க இவர் கடினமாக முயற்சி மேற்கொண்டுள்ளார்.
இதுவரை ரெய்னா 223 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, 5568 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, 65 டி20 போட்டிகள் (1307 ரன்கள்) விளையாடியுள்ள ரெய்னா, மோசமான பார்ம் காரணமாக சர்வதேச அணியில் வாய்ப்பு கிடைக்காமல், தவித்து வருகிறார்.
தற்போது உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான ஐபிஎல்., லில் மட்டும் விளையாடி வரும் இவர், தற்போது தனது மனைவியுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நெதர்லாந்து சென்ற இந்திய பிரதமர் மோடியை அங்கு நேரில் சந்தித்துள்ளார்.
இதுதொடர்பாக ரெய்னா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,’பொற்காலத்தை நோக்கி கொண்டுசெல்லும் மனிதரை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சி,’ என குறிப்பிட்டுள்ளார்.