June 29, 2017 தண்டோரா குழு
இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசெபத்தின் வருமானம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து நாடு ராணி எலிசபெத் II ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த நிதி ஆண்டின் முதல், பிரிட்டிஷ் அரசிடமிருந்து 97 மில்லியன் பவுண்ட் பெற்றுக்கொள்வார். கடந்த ஆண்டை விட 78 சதவீதம் அதிகமானது. இந்த தொகை ராணி மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் வசிக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையை மேம்படுத்த உதவும்.
இது குறித்து ராஜ குடும்பத்தினரின் வரவு செலவுகளை கவனித்துக்கொள்ளும் ஆலன் ரீட் கூறுகையில்,
“கடந்த நிதியாண்டின் போது, அரசிக்கு 42.8 மில்லியன் பிரிட்டிஷ் அரசு வழங்கியது. அந்த பணத்தை கொண்டு, அவருடைய பயண செலவுகள், பாதுகாப்பு, ஊழியர்கள் மற்றும் அரச அரண்மனையின் பராமரிப்பு ஆகியவற்றிற்காக செலவிட்டார். அந்த தொகையின் ஒரு பகுதி அவருடைய குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது.
அரச குடும்பத்திற்கு சொந்தமான ‘London West End’ என்னும் செல்வாக்கு மிக்க பகுதி மூலம் மார்ச் 2௦17 இறுதிக்குள் 328.8 மில்லியன் பவுண்ட் லாபம் அடைந்தது. இது கடந்த ஆண்டை விட 8 சதவீதம் அதிகமாகும்” என்று கூறினார்.