June 30, 2017 தண்டோரா குழு
இங்கிலாந்திலுள்ள ஒரு பள்ளியில், தேர்வு நேரத்தின்போது, பயம் மற்றும் கவலை ஏற்படும் மாணவர்களை உற்சாகப்படுத்த நாய்க்குட்டி ஒன்று வேலைக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் பிளைமௌத் (Plymouth) என்னும் நகரிலுள்ள ஒரு கல்லூரியில் பல நாடுகளிலிருந்தும் மாணவர்கள் படிக்கின்றனர். தேர்வின்போது, மாணவர்கள் தேர்வு பயத்தால் சோர்ந்துப்போய் விடுகின்றனர். இதை அறிந்துக்கொண்ட பள்ளி நிர்வாகம், சோர்ந்துப்போகும் மாணவர்களை உற்சாகப்படுத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து, நான்கு மாத நாய்க்குட்டி, ‘சோளா’, சோர்ந்துப்போன மாணவர்களை உற்சாகப்படுத்தும் திறனை கொண்டது என்று ஒரு செய்தித்தாள் மூலம் அறிந்தகொண்ட பள்ளி நிர்வாகம், அந்த நாய்க்குட்டியை வாங்கியது.
இது குறித்து அந்த கல்லூரியின் தலைமை ஆசிரியை கூறுகையில்,
“பணியில் நியமித்த முதல் நாளிலிருந்தே, தனது வாலை ஆட்டிக்கொண்டு கல்லூரி வளாகத்தில் உற்சாகமாக நடப்பது, தேர்வு நேரத்தில் அச்சத்தோடு இருக்கும் மாணவர்களை தனது செயல்களால் உற்சாகப்படுத்துவது போன்றவை கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.
தேர்வு பயத்தால், ஒரு மாணவர் தேர்வு எழுத மறுத்துவிட்டான். சோளாவை அவனுக்கு அறிமுகப்படுத்தி, சிறிது நேரம் அதனுடன் செலவிட்ட பிறகு, தேர்வுக்கு உற்சாத்துடன் சென்றான்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், வகுப்பில் உற்சாகமாக உள்ள மாணவர்கள் அருகில் அமருவதை விட, சோர்வோடும், அச்சத்துடனும் இருக்கும் மாணவர்கள் அருகில் அமருவதை தான் சோளாவுக்கு அதிகம் பிடிக்கும்” என்று கூறினார்.