June 30, 2017 தண்டோரா குழு
Cognizant Technology Solutions (CTS) நிறுவனம் அதன் ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைத்திருக்கிறது.
Cognizant Technology Solutions (CTS) நிறுவனத்தில் உலகெங்கிலும் சுமார் 2,61,2௦௦ ஊழியர்கள் பணிபுரித்து வருகின்றனர். தற்போது அந்த நிறுவனத்தின் வளர்ச்சி குறைந்தும் வர்த்தக செலவுகள் அதிகரித்து இருப்பதால், அதன் ஊழியர்களின் சம்பளம் மற்றும் பதவி உயர்வு மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Cognizant நிறுவனத்தின் தலைமை மக்கள் அதிகாரி, ஜிம் லெனாக்ஸ் வெளியிட்ட அறிக்கையில்,
“மேலாளர் பதவியில் இருப்பவர்களுக்கு, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்டது போல், அவர்களுடைய அடிப்படை ஊதியத்தில் ஒரு சதவீதம் உயர்த்திக்கொடுக்கப்படும்.
அதேபோல், மூத்த நிர்வாகி பதவிலிருப்பவர்களுக்கு அதன் மேல் பதவியில் இருப்பவர்களுக்கும் அதிக தொகை வழங்கப்படும். இதை தவிர, அவர்களுடைய செயல்திறன் போனஸ் வழங்கப்படும். நிறுவனத்தின் துணை தலைவர் பதவியிலிருப்பவர்களுக்கு புதிய சம்பளம் வரும் அக்டோபர் மாதம் 1 தேதி முதல் அமலுக்கு வரும்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்தார்”.