• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தொழில் நுட்ப வளர்ச்சி வரமா? சாபமா?

May 17, 2016 தண்டோரா குழு.

தனது கைப்பேசியைப் பரிசோதித்த காரணத்திற்காக கோபமடைந்த பெங்களூர் பெண்மணி, சமையல் அறைக்கத்தியால் கணவனின் வலது கை விரல்களை வெட்டிக் காயப்படுத்தியது, இளைய சமுதாயத்தின் மொபைல் போன் அடிமைத்தனத்திற்கு ஒரு மிகப் பெரிய சான்று.

இன்றைய சமுதாயத்தில் பிறந்த குழந்தை முதல் வயது முதிர்ந்த பெரியோர் வரை அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இந்த மொபைல், வாட்ஸ்ஆப். இன்டர்நெட், பேஸ் புக் போன்ற பல
தொழில்நுட்பப் பயன்பாடுகள். முதலில் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தன. மக்கள் அதன் பின் சென்றனர்.

பின்பு ஒன்றன் பின் ஒன்றாகப் பல பயன்பாடுகள் புகுந்து இன்று ஒட்டு மொத்த சமுதாயமும் இவற்றுக்கு அடிமையாகிவிட்டது. தன் குழந்தை நீரில் மூழ்குவதைக்கூட அறியாது ஒரு தாய் முக நூலில் மூழ்கி குழந்தையை பறி கொடுத்த சம்பவம் நாம் அறிவோம். இது போன்று ஏராளமான சம்பவங்கள். இவையும் ஒரு விதமான போதை வஸ்துக்களே.

இந்தப் போதையின் தாக்கத்திற்கு இதோ இன்னொரு உதாரணம். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் சுனிதாசிங், சந்திர பிரகாஷ் சிங். இவர்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியுள்ளன. இருவரும் தொழில் நுட்ப மையத்தில் பணிபுரிபவர்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் குடிபுகுந்தனர். கைக்கொண்டனஹள்ளி என்ற இடத்தில் உள்ள பி.எஸ்.ஆர் லேஅவுட்டில் வசித்து வந்தனர். சுனிதாசிங் ஒரு சிறிய ஓய்விற்காகத் தற்காலிகமாக வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டில் இருந்திருக்கிறார். மே 4ம் தேதி சந்திரபிரகாஷ் வேலை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.

இரவு உணவு எதுவும் தயாரிக்கப்படாததைக் கண்டு மனைவியிடம் விசாரித்துள்ளார். வெளியில் இருந்து தருவிப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுமென்றும் சுனிதா பதிலுரைத்துள்ளார்.

அப்பொழுதும் தனது மொபைல் போனிலேயே மூழ்கியிருந்ததால், ஏமாற்றமுற்ற சந்திரபிரகாஷ், மனைவியைக் திட்டியுள்ளார். எப்பொழுதும் மொபைல் போனிலேயே மூழ்கித் தனது கடைமைகளைச் சரிவர செய்வதில்லை என்பது சந்திர பிரகாஷின் வாதம். பிறகு இருபக்க வாய் வார்த்தைகள் கைகலப்பில் முடிந்தன, சந்திர பிரகாஷ், சுனிதாவின் மொபைலைப் பிடுங்கிப் பரிசோதிக்க ஆரம்பித்தார்.

சுனிதா அதைப் பிடுங்க முயன்று வெற்றி பெறவில்லை. அதனால் ஆக்ரோஷமடைந்த சுனிதா சமையல் அறையிலிருந்த கத்தியை எடுத்து சந்திர பிரகாஷின் கைவிரல்களை வெட்டியதுடன் பல
இடங்களில் காயத்தையும் ஏற்படுத்தினார்.

சந்திர பிரகாஷ் உடனே மொபைலை கீழே போட்டு விட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். கணவன், மனைவி இருவரும் தனித்தனியே காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர்.

காவல் துறையினர் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து இந்தப் பிரச்சினைக்கு சுமுக முடிவு எடுக்கவிருப்பதாகக் கூறியுள்ளனர். சந்திர பிரகாஷ் தனக்கு தனது மனைவியிடம் இருந்து பாதுகாப்புத்தர காவல்துறையிடம் விண்ணப்பித்துள்ளார்.

மேலும் படிக்க